
லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள மார்கன் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
சென்னையில் ஒரு பெண்ணை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, குப்பைத் தொட்டியில் வீசப்படுகிறார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் முழுவதும் கருப்பு நிறமாக மாறிவிடுகிறது. ஏற்கனவே மும்பையில் தனது மகளை யாரோ இதேபோல் கொலை செய்ததையும், தன்னையும் அதேபோல் கொலை செய்ய முயற்சித்ததால், காவல் அதிகாரியாக உள்ள விஜய் ஆண்டனி இந்த வழக்கை விசாரிக்க சென்னைக்கு வருகிறார். வழக்கை விசாரிக்க வந்த விஜய் ஆண்டனி மற்றும் காவல்துறைக்கு அஜய் தீஷன் மீது சந்தேகம் வருகிறது. அவர் தான் குற்றவாளி என நினைத்த போது, கதை வேறு கட்டத்திற்கு நகர்கிறது. அதன் பின்னரும் ஒரு பெண் அதேபோல் கொலை செய்யப்படுகிறார். கொலை செய்வது யார்? அவருக்கு என்ன நோக்கம்? எதனால் இப்படி கொலை செய்கிறார் என்பதுதான் மீதிக்கதை.
ஒரு வித்தியாசமான கதைகளத்தை இயக்குனர் எடுத்து இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி தன்னுடைய வழக்கமான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
திரில்லர், ஆக்சன் என்று எதுவாக இருந்தாலும் அல்வா சாப்பிடுவது போல சிறப்பாக செய்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. அதோடு இவர் படத்தை தன்னுடைய தோளில் சுமந்து சென்றார் என்று சொல்லலாம். இவரை அடுத்து படத்தில் தமிழறிவு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜய் தனது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் விஜய் ஆண்டனிக்கு பிறகு இவருடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. தன் நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்திருக்கிறார். இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். விஷ ஊசியால் ஒரு மனிதனுடைய உடலை கருப்பாக்கி கொலை செய்வது என்று வித்தியாசமான கான்செப்ட் இயக்குனர் எடுத்து இருக்கிறார். ஒவ்வொரு காட்சிகளையும் சிறப்பாக செய்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை விசாரணை நோக்கியே படத்தை இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார். இதுவே படத்திற்கு பிளஸ் ஆக இருக்கிறது. பெரிய அளவு திரில்லர் இல்லைனாலும் போர் அடிக்காமல் இருப்பதற்காக இயக்குனர் கதையை நகர்த்தி சென்றிருக்கிறார். குறிப்பாக வில்லனை காட்டும் காட்சி மிக சாதாரணமாக தான் இருக்கிறது. ஒரு நல்ல மெசேஜை இன்னும் கொஞ்சம் சுவாரசியத்துடன் விறுவிறுப்புடன் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது.