
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வழங்கும் க்ளீம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக இந்த ‘மகா அவதார் நரசிம்மா’ அனிமேஷன் திரைப்படம் உருவாகியுள்ளது. தொழில்நுட்பக் குழுவினராக கலை கருத்துருவாக்கம் :க்ளீம்,எழுத்து .ஜெயபூர்ணாதாஸ்,படத்தொகுப்பு :அஸ்வின் குமார், அஜய்வர்மா,இசை : சாம்ஸ் சி எஸ்,தயாரிப்பாளர்கள் ஷில்பா தவான், குஷால் தேசாய், சைதன்யா தேசாய்,திரைக்கதை இயக்கம் : அஸ்வின் குமார்,முதன்மை நிதி ஆலோசகர் : ரஜத் சாப்ரா , பாடலாசிரியர் : தி ஸ்லோகா,இணைத் தயாரிப்பாளர்கள் :சுபாஷ் சந்திர தவான் – துர்கா பலுஜா, கூடுதல் திரைக்கதை வசனம் அஸ்வின் குமார் மற்றும் ருத்ரா பி கோஷ், ஒலிக் கலவை : கண்ணன் சம்பத் – அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்,தலைமை தொழில்நுட்ப அதிகாரி சமய் மகாஜன், சி ஜி மேற்பார்வை : மகேஷ் குமார் மண்டல், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் போலே : கரண் அர்ஜுன்சிங் – ஜஸ்ட் போலே ஆர்ட் என்று பணியாற்றியுள்ளனர். பாகவத புராணத்தில் உள்ள பக்த பிரகலாதன் கதை அனைவரும் அறிந்ததே.இது பல்வேறு கலை வடிவங்களில் மக்களிடம் புகழ்பெற்றது. கிராமங்களில் கூட பக்த பிரகலாதன் நாடகம் ஆங்காங்கே அரங்கேறும்.பக்த பிரகலாதன் யார்? விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுக்கக் காரணமான பின்னணி என்ன? என்பது பற்றியும் அறியும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அனிமேஷன் திரைப்படம் தான் ‘மகா அவதார் நரசிம்மர்’
தெரிந்த கதை என்றாலும், அதை தற்போஒதைய தலைமுறையினர் தெரிந்துக்கொள்ள வேண்டிய நோக்கத்துடனும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து மகிழும்படியான அனிமேஷன் திரைப்படமாக கொடுத்திருக்கிறார்கள். சிறுவர்களுக்கு புரியும்படியும், ரசிக்கும்படியும் கதையை நகர்த்தியிருப்பதோடு, பிரமாண்டமான அனிமேஷன் காட்சிகள் மூலம் வியக்க வைத்திருக்கிறார்கள். பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகளுக்கான படமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும், புராண கதைகளை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் படத்தினை உருவாக்கியிருக்கிறார்கள். அனிமேஷனையும் மிகச் சரியாக கையாண்டிருக்கின்றனர் படக்குழுவினர். குறிப்பாக கிளைமாக்ஸில் நரசிம்ம அவதாரமும், அவர் அசுரனை அழிப்பதும் மெய்சிலிர்க்க வைக்கிறது. வசன உச்சரிப்பு, இசை, காட்சியமைப்பு என அனைத்தையும் சரியாக கையாண்டு சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். இதுவரை திரைப்படங்களில் நாம் பார்த்த பிரகலாதன் பற்றிய படங்களில் வரும் கதாபாத்திரங்களை இதில் முற்றிலும் மாறுபட்ட வடிவத்திலும், பிரமாண்டமாகவும் உருவாக்கியிருப்பது படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.